புலம் பெயர் தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை - என்ன செய்ய வேண்டும் என கோவை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

eShram Portal-லில் பதிவு செய்துள்ள புலம் பெயர் தொழிலாளர்கள் நீண்ட காலமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வருபவர்கள் குடும்ப அட்டை பெறுவதற்காக உரிய படிவத்தினை பூர்த்தி செய்து தொடர்புடைய வட்டாட்சியர் அலுவலகங்களில் இயங்கி வரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: நீண்ட காலமாக தமிழ்நாட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் eShram Portal-லில் பதிவு செய்துள்ள புலம் பெயர் தொழிலாளர்களில் எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் குடும்ப அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் குடும்ப அட்டை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்த மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி குடும்ப அட்டை இல்லாத பதிவு செய்த புலம் பெயர் தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் கோயம்புத்துார் மாவட்டத்தில், அனைத்து வட்டங்களிலும் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த புலம் பெயர் தொழிலாளர்கள் eShram Portal-லில் பதிவு செய்துள்ள நபர்களில் சிலர் நீண்ட காலமாக நிரந்தரமாக வசித்து வருகிறார்கள்.

சிலர் குடும்பத்தில் உள்ள ஒரு சிலர் தான் சார்ந்த மாநிலத்தில் வசித்து வருகிறார்கள். இதில் நீண்ட காலமாக தமிழ்நாட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் eShram Portal-லில் பதிவு செய்துள்ள புலம் பெயர் தொழிலாளர்களில் எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் குடும்ப அட்டை வழங்கிடவும் தற்காலிகமாக பணிபுரிந்து கொண்டிருப்பவர்களுக்கு அவர்களது விவரம் முழுமையாக பெற்று அவர் சார்ந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, e Shram Portal-லில் பதிவு செய்துள்ள புலம் பெயர் தொழிலாளர்கள் நீண்ட காலமாக கோயம்புத்துார் மாவட்டத்தில் வசித்து வருபவர்கள் உரிய படிவத்தினை பூர்த்தி செய்து தொடர்புடைய வட்டாட்சியர் அலுவலகங்களில் இயங்கி வரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்à®...